தாவரவியலில் மிக முக்கிய குறிப்புகள்
தாவர உலகம்
🌳 ஐந்துலக வகைப்பாட்டை அறிமுக படுத்தியவர் - R.H.விட்டேகர்
🌳 பூஞ்சைகள்:
எ.கா. மோல்டுகள், காளான்கள், டோட்டூல்ஸ், அடைப்புகுறி பூஞ்சை, பஃப்பந்துகள்
🌳 ஒற்றை செல்களால் ஆனவை - ஈஸ்ட்
🌳 பல செல்களால் ஆனவை - ரைசோபஸ், அகாரிகஸ், அஸ்பர்ஜில்லஸ்
🌳 பூஞ்சையின் உடலம் மைசிலியத்தால் ஆனவை.
🌳 மைசிலியம் பல ஹைப்பாக்களின் தொகுப்பு.
🌳 பூஞ்சையின் செல்சுவர் - கைடின்
🌳உணவூட்டம் வகைகள் - 3
1. ஒட் டுண்ணிகள்:-
மற்ற உயிரினங்கள் சார்ந்து வாழும்
எ.கா. பக்சீனியா
2. சாறுண்ணிகள்:-
இறந்த மற்றும் அழுகிய உயிரினங்கள் சார்ந்து வாழும்
எ.கா. அகாரிகஸ், ரைசோபஸ்
3. கூட்டுயிரிகள்:-
எ.கா. லைக்கன்கள், மைகோரைசா
🌳 பூஞ்சைகளின் வகைகள்:-
⭕ சைகோமைகோட்டா - ரொட்டி காளான்
⭕ பெசிடியோமைகோட்டா - கணுவடி பூஞ்சை
⭕ ஆஸ்கோமைகோட்டா - கோப்பைப் முந்தைய பூஞ்சை
⭕ டியுடெரோமைகோட்டா - பெனிசிலியம்
🌳 இதுவரை கண்டறியப்பட்ட பூஞ்சை வகைகள் - 1,00,000 மேல்
🌳 சுற்றுச்சூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிரிக் காட்டாயாக விளங்குவது - லைக்கன்கள்
🌳 உண்ணத் தகுந்த காளான்கள்
எ.கா. அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ்
🌳 நச்சுத்தன்மை உடைய காளான்கள்
எ.கா. அமானிடா மஸ்காரியா, அமானிடா பல்லோய்ட்ஸ்
🌳 காளான்களில் காணப்படும் சத்து - புரதம், கனிமங்கள்
🌳 பெனிசிலியம் எனும் பூஞ்சையில் இருந்து பெறப்படுவது - பெனிசிலின்
🌳 சில நுண்ணுயிரிகள்
எ.கா. ஸ்டெரெப்டோமைசின், நியோமைசின், கானாமைசின், ஜென்டோமைசின், எரித்ரோமைசின்
🌳 வைட்டமின் B தயாரிப்பில் பயன்படும் பூஞ்சை - அஸ்ஃப்யா காஸிப், எரிமோதீசியம் அஸ்ஃப்
🌳 பூஞ்சை நோய்கள்:-
1. மனிதன் - மைகோசஸ், பாதப்படை, படர் தாமரை
2. விலங்குகள் - எர்காட், பாதப்படை
3. தாவரங்கள் - துருநோய், கறுப்பழுகல், கரும்புள்ளி, கேன்கர்
🌳 கிளாவிஸ்செப்ஸ் பா்பர்ரியா - பகற்கனவு பூஞ்சை
🌳 குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவது - ஆஸ்பரிஜில்லஸ்
🌳 குழந்தைகளுக்கு ஒவ்வாமை பாதுகாப்பது - கிளாடோஸ்போரியம்

Comments
Post a Comment